மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
கிறிஸ்தவ தேவாலயம் அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தொிவிகப்பட்டது. இதனால் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு கடந்த 4 வருடங்களாக சிதம்பரம் பகுதியிலிருந்து ஆதரவற்ற நிலையில் வந்த தனலட்சுமி (வயது 80) என்பவர் ஊழியம் செய்து தங்கி இருந்து வந்தார். வயது மூப்பின் காரணமாக தனலட்சுமி நேற்று உயிாிழந்தாா். எனவே கிறிஸ்தவ தேவாலயம் சார்பில் இறந்த மூதாட்டி உடலை தேவாலயத்துக்கு சொந்தமான குடியிருப்புகளுக்கு இடையே அமைந்துள்ள இடத்தில் அடக்கம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சீர்காழி தாசில்தாருக்கு புகார் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் செந்தில்குமார் பாதிரியார் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடல் தாண்டவன்குளம் சுந்தரலிங்கம் தெருவுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.