தீ தொண்டு நாள் அனுசரிப்பு


தீ தொண்டு நாள் அனுசரிப்பு
x

தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்பு பணியின் போது இறந்தவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். தீயணைப்பு வீரர்கள் தர்மலிங்கம், திருமாவளவன், காமராஜ், கலையரசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து வீரர்கள் கலந்து கொண்டு தீயணைப்பு பணியின்போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Next Story