கல்லறை திருநாள் அனுசரிப்பு


கல்லறை திருநாள் அனுசரிப்பு
x

கல்லறை திருநாள் அனுசரிப்பு

நாகப்பட்டினம்

நாகை, வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் உறவினர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாள்

கிறிஸ்தவர்கள் மரணம் அடையும்போது அவர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். அவ்வாறு அடக்கம் செய்தவர்களை கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவு கூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இறந்த தங்களது உறவினர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்களது ஆத்மா சாந்தியடையவும் வேண்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும். தங்களது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வது கிறிஸ்தவர்களின் வழக்கம்.

மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை

அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்தனர். இதேபோல் ராயப்பன் கல்லறை உள்ளிட்ட பல்வேறு கல்லறைகளில் தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம்செய்து மாலை அணிவித்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி

இதேபோல் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் திரளான கிறிஸ்தவர்கள் சென்று சிறப்பு திருப்பலி நடத்தினர். இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி கிழக்குகடற்கரைசாலை ஆர்ச் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் அங்கு உள்ள ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story