பசுமை பயண நாள் கடைபிடிப்பு


பசுமை பயண நாள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கடியில் பசுமை பயண நாள் கடைபிடிக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயற்கைக்கு இணக்கமான சூழ்நிலையை ஊக்குவிக்கவும், கரியமில வாயு உமிழ்வை தவிர்த்து உலக வெப்பமயமாதலை குறைக்கவும் அழகப்பா பல்கலைக்கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவும், வருகின்ற 16-ந் தேதி அனுசரிக்கப்பட உள்ள உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பசுமை பயண நாள் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கரியமில வாயுவை உமிழக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக அனைத்து வளாகங்களிலும் தடை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் ரவி மற்றும் பல்கலைக்கழக அனைத்து பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சைக்கிளில் பயணம் செய்தனர்.


Next Story