ராஜீவ் காந்தி நினைவுநாள் அனுசரிப்பு


ராஜீவ் காந்தி நினைவுநாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டையில் உள்ள காரைக்குடி பகுதிநேர சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தேவகோட்டை கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் சஞ்சய் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி, ராஜீவ்காந்தி பற்றி பேசினார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறாவயல் பெரி.மகேந்திரன், மாநில இலக்கிய அணி செயலாளர் காரை வி.சாமிநாதன், தேவகோட்டை வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார், செலுகை பெத்து, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சிரவளிநாதன், காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர்கள் சருகணி டென்னிஸ் ஆசிரியர், நாகமதி பெரியசாமி ஆசிரியர், செக்ககுடி குழந்தைச்சாமி, அழகு, இருமதி ஆரோக்கியசாமி, புளியால் ஜெய்னுதீன் ரஜாக், பனிபுலான்வயல் செபஸ்தி, தேவகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சங்கர், காளிஸ்வரன், ராம்கி, உள்பட நகர, வட்டார காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story