21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிப்புகலெக்டர் தகவல்


21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிப்புகலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிக்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடலூர்

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 21.2.2023 முதல் 28.2.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது.

ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினி தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story