ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு


ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
x

தேனி அல்லிநகரத்தில் ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தேனி

தேனி அல்லிநகரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அருந்தமிழரசு தலைமையில் ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, ஒண்டிவீரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story