சாலையை ஆக்கிரமித்து அமைத்த மாட்டுக்கொட்டகையால் இடையூறு


சாலையை ஆக்கிரமித்து அமைத்த மாட்டுக்கொட்டகையால் இடையூறு
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தம் அருகே சாலையை ஆக்கிரமித்தவர் வைக்கோல் படப்புடன் மாட்டு கொட்டகை அமைத்துள்ளதால் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

பஸ் நிறுத்தம் அருகே சாலையை ஆக்கிரமித்தவர் வைக்கோல் படப்புடன் மாட்டு கொட்டகை அமைத்துள்ளதால் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் கால்நடைகளை கட்டி மாட்டுக்கொட்டகை போல் பயன்படுத்துவதோடு வைக்கோல் படப்பையும் அமைத்துள்ளார்.

இந்த ஊரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் உள்ள சிறுமூர், செட்டித்தாங்கல், எஸ்.யூ.வனம், வெட்டியான் தொழுவம், கிருஷ்ணாவரம் மற்றும் பல இடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் ஏராளமானோர் பஸ்சில் வருகின்றனர்.

இடையூறு

ஆனால் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் மாட்டுக்கொட்டகையுடன் ைவக்கோல் படப்பு அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்சில் வரும் மாணவர்கள், பொதுமக்கள் இறங்குவதற்கும் தங்கள் ஊருக்கு செல்வதற்காக ஏறுவதற்கும் நெருக்கடியான இடத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் இறங்கி நடந்து வரும்போது ஒதுங்க இடமில்லாமல் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் அபாயமும் உள்ளது.

நடவடிக்கை அவசியம்

இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிட்டு நவீன ப்நிாற்கூடம் இருக்கை வசதியுடன் ஏற்படுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு மாட்டுக்கொட்டகைைய வைக்கோல் படப்புடன் அகற்றி பஸ்நிறுத்தம் அமைப்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story