மயான வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மயான வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நல்லம்பள்ளி அருகே மயான வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராம ஊராட்சியில் பல்வேறு சமுதாயத்திற்கான மயான வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாள் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயானத்திற்கு செல்லும் வழிப்பாதை மற்றும் மயானத்திற்கு சொந்தமான இடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி மீட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் போது பிரச்சினை ஏற்பாடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதை மற்றும் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.


Next Story