கோட்டை கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்


கோட்டை கண்மாயை ஆக்கிரமித்த   கருவேல மரங்கள்
x

வெம்பக்கோட்டை அருகே கோட்டை கண்மாய் ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே கோட்டை கண்மாய் ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கோட்டை கண்மாய்

வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள கோட்டை கண்மாய் 100 ஏக்கர் பாசன பரப்பு கொண்டது. பூசாரி நாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், மேல கோதை நாச்சியார்புரம், கீழ கோதை நாச்சியார்புரம், பசும்பொன் நகர், விஜயகரிசல்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

பல்ேவறு கிராமங்களுக்கு பாசனத்திற்கு முக்கியத்துவம் பெற்ற இந்த கண்மாய் சீரமைக்கப்படாததால் மடையில் கசிவு ஏற்பட்டு தண்ணீா் வீணாக செல்கிறது.

விவசாயிகள் வேதனை

இதன் காரணமாக மழை நீரை சேகரிக்க முடியாமல் பல ஆண்டுகளாக விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக விவசாய பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டன. கண்மாயிலும் கருவேல மரங்கள் காடு போன்று வளர்ந்துள்ளது. கோட்டைகண்மாய்க்கு சேதுராமலிங்கபுரம் வடக்கு பகுதியில் உள்ள ஓடை வழியாகவும், பூசாரி நாயக்கன்பட்டி மற்றும் கலைஞர் காலனி அருகில் உள்ள ஓடை வழியாக வரத்து கால்வாய் மூலமாக தண்ணீர் வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

ஆனால் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறைந்த அளவு தான் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இந்த கண்மாய் நிரம்பினால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மடையை பழுது பார்க்கவும், கண்மாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story