சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை காட்சிப்படுத்திய பேரளம் மாணவர்
தினத்தந்தியில் வெளிவந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து காட்சிப்படுத்திய பேரளம் மாணவரை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
நன்னிலம்:
தினத்தந்தியில் வெளிவந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து காட்சிப்படுத்திய பேரளம் மாணவரை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
10-ம் வகுப்பு மாணவர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரவீன்ஜி(வயது15).
இவர் தினத்தந்தி நாளிதழில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிவந்த 75 தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தினமும் படித்து அதை சேகரித்து வைத்திருத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு
இந்த நிலையில் நேற்று பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் மாணவர் பிரவீன்ஜி தான் சேகரித்து வைத்திருந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பள்ளியில் உள்ள பெயர் பலகையில் ஒட்டி காட்சிப்படுத்தினார்.
இதை விழாவில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
பாராட்டு
தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து காட்சிப்படுத்திய மாணவர் பிரவீன்ஜியை பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, பள்ளி தலைமையாசிரியர் மாதவன் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.