தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்டம்


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

நிறுவன தின விழா

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

விழாவை முன்னிட்டு வங்கியில் நிறுவனர்களுக்கு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இ-லாபியை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி செயலாளர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

மேலும் வங்கியில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் 101 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. 80 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

ரூ.450 கோடி கடன் உதவி

அதனை தொடர்ந்து தூத்துக்குடி பாஸ்கர மஹாலில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தொடங்கி வைத்தார். கடன் பிரிவு பொது மேலாளர் நாராயணன் வரவேற்றார். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், தொழிலதிபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர். நிகழ்ச்சி முடிவில் துணை பொது மேலாளர் (கடன்பிரிவு) விஜயன் நன்றி கூறினார். இதேபோல் 12 மண்டலங்களிலும் நடந்த அனைத்து முகாம்களில் மொத்தம் 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடி கடன் உதவி தொகை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் ஏ.வி.எம்.கமல்வேல் மஹாலில் நடந்த விழாவில் பொது மேலாளர் சூரியராஜ் வரவேற்றார். முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நிர்வாக இயக்குனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கால் சென்டரை திறந்து வைத்து பேசினார். விழா முடிவில் வங்கியில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.

விழாவில் வங்கிகளின் இயக்குனர் குழுவினர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணைப் பொது மேலாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story