ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில்இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அதிகாரி ஆய்வு
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பாம்பாறு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மாநில கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழர் மறுவாழ்வு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இலங்கை தமிழர் நலத்திட்டத்தின் கீழ் சுமார் 36 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அந்த வீடுகளை சென்னையில் இருந்து மாநில கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இலங்கை தமிழர் பொதுமக்களிடம் குறைகள் அடிப்படை வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முகாமிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பயனாளிகளை முறையாக தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகள்
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, சிவப்பிரகாசம், உதவி பொறியாளர்கள் குமார், மாதையன், அருள்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ராஜா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மகாராஜன், முருகன், கண்ணன், ஊராட்சி செயலாளர் கிருபாகரன், ஒப்பந்ததாரர் அழகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் ஆகியோர் இருந்தனர்.