வெள்ளாற்று கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு


வெள்ளாற்று கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
x

வெள்ளாற்று கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக வெள்ளாறு திகழ்கிறது. அந்த வெள்ளாற்றில் இருந்து வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள 73 குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ரூ.14 கோடியே 94 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சரவணன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேப்பூர் ஒன்றியம் பழைய அரசமங்கலத்தில் 1.6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளையும், பரவாய் சமத்துவபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமை பொறியாளர் முரளி, மேற்பார்வை பொறியாளர் மாதவன், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story