ஓட்டலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஓட்டலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள வாரச்சந்தை அருகே உள்ள ஒரு ஓட்டலில் சுகாதாரமற்ற நிலையில் கெட்டு போன உணவுகளை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் உதவியாளர் கருப்பையா ஆகியோருடன் அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த ஓட்டலில் முதல் நாள் சமையல் செய்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததும், அந்த ஓட்டல் அருகே கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியில் சமையல் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கெட்டு போன நிலையில் இருந்த நண்டு, மீன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து 5 நாட்களுக்கு கடையை அடைக்க உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story






