ரயில்வே மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு


ரயில்வே மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
x

மயிலாடுதுறையில் ரெயில்வே மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தின் அருகே குடியிருப்போர் தங்களுக்கு மாற்று இ்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் ரெயில்வே மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தின் அருகே குடியிருப்போர் தங்களுக்கு மாற்று இ்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேம்பாலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழும், மேம்பாலத்தை ஒட்டியும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை 3 நாட்களில் காலி செய்யக்கோரி நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

எதிா்ப்பு

ஆனால் மாற்று இடம் வழங்க வேண்டும், வீடுகளை காலிசெய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தும், வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நேற்று காலை சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில் பொறியாளர்கள் குழுவினர், மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் ெரயில்வே மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்துவரும் மக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும். இடத்தை காலிசெய்வதற்கும் அவகாசம் கொடுக்க வேண்டும் என ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதைக்கேட்டறிந்த அதிகாரிகள் குழுவினர் மேம்பாலத்தை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.


Next Story