கோபி அருகே பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு


கோபி அருகே பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு
x

கோபி அருகே பள்ளி, கல்லூரி பஸ்களில் கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி ஆய்வு நடத்தினார்.

ஈரோடு


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி, பவானி ஆகிய பகுதியில் உள்ள பள்ளி பஸ்களில் கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி ஆய்வு நடத்தினார்.

அப்போது பள்ளி பஸ்களில் அவசரகால வழி உள்ளதா எனவும், அரசு விதிமுறைகள் படி உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பஸ் டிரைவர்களிடம் அதிக வேகம் செல்லக் கூடாது, அதிகமாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லக் கூடாது, பஸ்களில் உதவியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில் கோபி ஆர்டிஓ முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, கண்ணன்,சுகந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஜினி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story