அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைக்கும் திட்டத்தின் முன்னோடி திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை
சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைக்கும் திட்டத்தின் முன்னோடி திட்டமான சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சீரமைப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா நா.முருகானந்தம் சுப்ரியா சாஹூ பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்தராவ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story