சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு


சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு
x

ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் மாநில நெடுஞ்சாலையான மல்லியகரை, ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் கவுண்டம்பாளையம் முதல் ஆண்டகளூர் கேட் வரை சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் நெடுஞ்சாலை தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, தர கட்டுப்பாடு உதவி பொறியாளர் பிரபாகரன், ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story