குடிநீர் இணைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
குடிநீர் இணைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை யூனியன் மங்களக்குடி ஊராட்சியில் 14-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊராட்சியை சேர்ந்த 350 வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டிற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார். இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், பொறியாளர் வேதவள்ளி, பணி மேற்பார்வையாளர் மோகனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story