இலங்கை தமிழர்கள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு
இலங்கை தமிழர்கள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலூர்,
மேலூர் அருகே திருவாதவூரில் கடந்த 2002-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் முகாம் தொடங்கப்பட்டது. அப்போது அங்கு 520 சிறிய தகர மேற்கூரை குடியிருப்புகளில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருக்க இடம் இல்லாத நிலையில் இட நெருக்கடியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி புதிதாக சிமெண்டு மேல்தளத்துடன் கூடிய 30 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளை சென்னையில் இருந்து திருவாதவூர் முகாமுக்கு வந்த மறுவாழ்வு துறை ஆணையாளர் ஜெசிந்தாசிலாசரஸ், துணை இயக்குனர் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன், முகாம் தாசில்தார் செல்வராஜ், மேலூர் தாசில்தார் செந்தாமரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.