ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு


ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு
x

நெமிலி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

நெமிலியில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் உணவு சமைக்க தேவையான பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து ரெட்டிவலம் கிராமத்தில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியை பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் அனைவருக்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டதா என்பதை கேட்டறிந்தார். மேலும் எப்போதும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணி உள்ளிட்ட விடுதி பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story