ரெயில் நிலையங்களில் அதிகாரி ஆய்வு


ரெயில் நிலையங்களில் அதிகாரி ஆய்வு
x

கடலூரில் ரெயில் நிலையங்களில் அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலூர்

குறைகளை கேட்டறிந்தார்

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மானீஸ் அகர்வால் நேற்று காலை கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர், அங்குள்ள நடைமேடை, நடை மேம்பாலம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஊழியர்களின் அறை, பயண சீட்டு வழங்குமிடம் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மானீஸ் அகர்வால், அங்கிருந்த பயணிகளிடம் ரெயில் நிலையத்தில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அங்கிருந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அருண்குமார், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்தார்.

அடிப்படை வசதி

அதனை கேட்டறிந்த ரெயில்வே மேலாளர் மானீஸ் அகர்வால், இதுதொடர்பாக ரெயில்வே வாரியத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு வந்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மானீஸ் அகர்வால், அங்கு பயணிகளுக்காக செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story