திருவண்ணாமலையில் உழவர் சந்தைகளில் அதிகாரி ஆய்வு


திருவண்ணாமலையில் உழவர் சந்தைகளில் அதிகாரி ஆய்வு
x

திருவண்ணாமலையில் உள்ள உழவர் சந்தைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள உழவர் சந்தை மற்றும் தாமரை நகரில் உள்ள உழவர் சந்தையை நேற்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குனர் எஸ்.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது காய்கனி வரத்து அதிகரிக்கவும், நுகர்வோரின் தேவை அறிந்து அதனை பூர்த்தி செய்திடவும், அங்கு உள்ள சூரிய மின் ஆற்றல் கொண்டு இயங்கும் குளிர் பதனக்கிடங்கு ஆய்வு செய்து அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து உழவர் சந்தை விவசாயிகளுக்கு கத்திரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றின் குழிதட்டு நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் திருவண்ணமலை விற்பனை குழுவிற்கு சொந்தமான 10.55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் வேளாண் உணவு பதப்படுத்தும் தொகுப்பினை ஆய்வு செய்தார். மேலும் மணிலா மரச்செக்கு சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு மையம் மற்றும் நவீன சிப்பம் கட்டும் அலகு ஆகியவற்றின் கட்டுமான பணியினையும் ஆய்வு செய்தார்.

மேலும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட தேசிய வேளாண்மை சந்தையையும் பார்வையிட்டார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அரக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story