மன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிகாரி ஆய்வு
மன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வெடி விபத்துக்கள் நேர்ந்ததையொட்டி பட்டாசு தயாரிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு சோதனைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி, உதவி கலெக்டர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள், வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மன்னார்குடி தாசில்தார் கார்த்திகேயன், தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேஷ்ணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.