மேலூரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு


மேலூரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு
x

மேலூரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

மதுரை

மேலூர்

மேலூரில் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார். அதனையடுத்து தினசரி சந்தை கட்டுமான பணி மற்றும் சாலைகரையான் ஊருணி மேம்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார். மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன், மண்டல நிர்வாக பொறியாளர் மனோகரன், மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story