'தினத்தந்தி' செய்தி எதிரொலி:மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு


தினத்தந்தி செய்தி எதிரொலி:மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

ஆய்வு

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து போனது. இதுபற்றி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவின்பேரில் தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தலைமையிலான அதிகாரிகள் நாகலூர் கிராமத்துக்குநேரில் சென்று மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்பு

அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு, நெல் ரகம் மற்றும் சேத விவரம் குறித்து கேட்டறிந்ததுடன், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களை கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினார். அப்போது விவசாயிகள் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீல் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

இதைகேட்ட உதவி இயக்குனர் சந்துரு இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், உதவி வேளாண்மை அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story