கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆட்சிமொழி கருத்தரங்கு


கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆட்சிமொழி கருத்தரங்கு
x

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆட்சிமொழி கருத்தரங்கு நடைபெற்றது.

கரூர்

ஆட்சிமொழி கருத்தரங்கு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோருக்கு ஆட்சிமொழி கருத்தரங்கு வகுப்புகள் கரூர் அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் கருணாநிதி நிகழ்த்திய செம்மொழி செயல்பாடுகள் என்ற தலைப்பில் கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் சுந்தரம், காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு என்ற தலைப்பில் கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் கொடியரசு, திரைப்படங்களில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறை கவுரவ விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், அரசு பணியாளர்களும் ஆட்சிமொழி சட்டமும் என்ற தலைப்பில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் சுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி

மேலும் கணினி தமிழ் என்ற தலைப்பில் திருச்சி நவலூர்குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டனும், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் எழில்வாணன் ஆகியோர் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தமிழறிஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களிலிருந்து அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பங்கேற்ற அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் கரூர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story