வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு
x

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குன்னம் தாலுகா ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த தையல் தொழிற்சாலையையும், பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தையும், முத்துநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தையும், குன்னம் தாலுகா பரவாய் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், உதவி மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story