பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்து அதிகாரி ஆய்வு


பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்து அதிகாரி ஆய்வு
x

ஏலகிரி மலையில் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் உள்ள முத்தனூர் கிராமத்தில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டித் தருவதற்காக பழங்குடியின திட்ட அலுவலர் கலைச்செல்வி தலைமையில், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆகியோர் முத்தனூர் கிராமத்தில் நிலம், வீடு இல்லாதவர்களை கண்டறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஏலகிரி மலையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு அந்த இடத்தில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பழங்குடியின திட்ட அலுவலர் தெரிவித்தார்.

1 More update

Next Story