சுகாதார நலவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
பெரியகுளம் அருகே சுகாதார நலவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மக்கள் நல சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊரகப்பகுதியில் உள்ள சித்த மருத்துவ நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. இத்திட்டத்தில் சுகாதார நலவாழ்வு மையங்களில் மூலிகை தோட்டம் வளர்ப்பு, யோகா பயிற்சி, கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவத்திற்கான பயிற்சி, வீடுகள் தோறும் மருத்துவம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள சுகாதார நலவாழ்வு மையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. மூலிகை தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மூலிகையின் பயன்பாடு பற்றி டாக்டர்கள் விளக்கினார். இந்த மையத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் அமைச்சக இயக்குனர் டாக்டர் ரகு தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது இந்திய மருத்துவ துறை இணை இயக்குனர் பார்த்திபன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், நிலைய மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.