ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை


ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 24 Sept 2023 12:30 AM IST (Updated: 24 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை பகுதியில் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிவுரையின் பேரில் செங்கோட்டை நகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துராஜா தலைமையில் அசைவ ஓட்டல்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் நிறம் சேர்க்கப்பட்ட அசைவ உணவு வகைகள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. விதி மீறல்கள் உள்ள ஓட்டல்களின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் காலாவதியான சுமார் 10 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது நகராட்சி சுகாதார மேற்பார்வையாளா்கள் மாணிக்கம், காளியப்பன், பணியாளா்கள் மற்றும் துாய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

1 More update

Next Story