வனப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு


வனப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

வேலூரில் வனப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர்

வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் அன்வர்தின், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் பசுமையாக்குதல் திட்ட இயக்குனர் பெரியசாமி ஆகியோர் நேற்று வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை அழகாக்குதல் மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் குறித்து பார்வையிட்டனர். மேலும் வனத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் தொடர்பாக வனக்குழுக்கள் மற்றும் கிராம மக்களிடையே குழுக்கள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து பள்ளிகொண்டா பகுதியில் உள்ள வனவிரிவாக்க மையத்தில் உள்ள நாற்றங்காலினையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வேலூர் வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story