காசி ஆன்மிக பயணத்துக்கு புறப்பட்ட 67 பேருக்கு அதிகாரிகள் வாழ்த்து


காசி ஆன்மிக பயணத்துக்கு புறப்பட்ட 67 பேருக்கு அதிகாரிகள் வாழ்த்து
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசி ஆன்மிக பயணத்துக்கு புறப்பட்ட 67 பேருக்கு அதிகாரிகள் வாழ்த்து.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 200 பேர்களை 3 அணிகளாக பிரித்து காசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர். அங்கு புனித நீராடி விட்டு அவர்கள் அனைவரும் விழுப்புரம் வந்தனர். அவர்கள் நேற்று காலை அங்கிருந்து விழுப்புரம்-வாரணாசி ரெயில் மூலம் காசிக்கு புறப்பட்டனர். அவர்கள் 67 பேரையும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன் சந்தித்து பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிபிரியா, இணை ஆணையர்கள் சுதர்சனம், ந.தனபால், ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story