ஆனைமலையில்ரூ.27 லட்சத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணி-விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தகவல்


ஆனைமலையில்ரூ.27 லட்சத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணி-விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:46 PM GMT)

ஆனைமலையில் ரூ.27 லட்சத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் ரூ.27 லட்சத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவர் பூங்கா

ஆனைமலை பேரூராட்சியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சிறுவர் -சிறுமிகள், பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில் ஆனைமலை- முக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ரங்காராம் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்வது உண்டு. மேலும் மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொழுதை கழிக்க ஆழியார் பூங்காவிற்கு செல்ல வேண்டி உள்ளது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீசா, சறுக்கு, ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து போதிய பராமரிப்பின்றி பயனற்று கிடந்தது. இதனால் குழந்தைகள் விளையாடுவதில் தடை ஏற்பட்டது. மேலும் குழந்தைகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பூங்காவை சீரமைக்க ரூ.27 லட்சம் ஒதுக்கப்பட்டது.

80 சதவீத பணிகள் நிறைவு

இதையடுத்து பூங்காவில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக விைளயாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சிறுவர் பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களான சீசா, சறுக்கு ஊஞ்சல் உள்ளிட்டவைகள் மாற்றி அமைக்கப்பட்டு பூங்காவை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் ஆகியவற்றில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ணம் பூசி நீரூற்று அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் மீண்டும் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story