அரியலூரில் 120 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு


அரியலூரில் 120 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
x

அரியலூரில் 120 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அதன்படி பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், துணை ஆய்வாளர் சரவணபவன், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சலீம் ஜாகித், முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமரா

பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமரா மேலும் ஜன்னல் கரையோர கம்பிகள், அவசரகால வழி, வேககட்டுப்பாட்டு கருவி, விளக்குகள், ஒலிப்பான், வாகனத்தின் முன்புறம், உள்புறம் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனத்தின் பின்புறம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதையும் கண்காணித்தனர்.

20 வாகனங்களில் குறை

ஆய்வுக்கு 120 பள்ளி வாகனங்கள் வந்திருந்தன. இதில் 20 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டது.

அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மறு ஆய்வுக்கு கொண்டு வர தெரிவித்தனர். நேற்று ஆய்வுக்கு வராத மற்ற பள்ளி வாகனங்கள் 31-ந்தேதிக்குள் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டது.


Next Story