பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு


பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x

பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டம் பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் நெல்லை மண்டல தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது நெல்லை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி, நெல்லை மின்பகிர்மான வட்ட மின்னளவி மற்றும் சோதனை பிரிவு செயற்பொறியாளர் ஷாஜகான், உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுச்சாமி, தெரேசா பாக்கியவதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story