மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆனைமலை
ஆனைமலை தாலுகாவில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கப்படுகிறதா? என்று காவல்துறையினர் மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-
இருமல் மாத்திரை, கேன்சர் மற்றும் பிரசவ காலத்தில் வலிக்கு பயன்படுத்தும் மாத்திரை, தூக்க மாத்திரை போன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அது போதைப்பொருளாக மாறிவிடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்க கூடாது. இதை மீறி வழங்கும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் கடைக்கு சீல் வைத்து உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 மாதத்தில் ஆனைமலை தாலுகாவில் உத்தரவை மீறிய 2 மருந்தகங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அப்போது மருந்து ஆய்வாளர் ராஜேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.