கீரப்பாளையம் பகுதியில் நோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு


கீரப்பாளையம் பகுதியில்    நோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீரப்பாளையம் பகுதியில் நோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர்

புவனகிரி,

நோய் தாக்குதல்

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார பகுதிக்குட்பட்ட வடஹரிராஜபுரம், ஆயிப்பேட்டை, மதுராந்தகநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை இலை சுருட்டுப்புழு மற்றும் இலை புள்ளி நோய் தாக்கியது. இதுபற்றி தகவல் அறிந்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடராஜன், உழவியல் துறை ஹரிசுதன், பூச்சியியல் துறை செங்குட்டுவன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விவசாயிகளுக்கு அறிவுரை

அப்போது அவர்கள், இலைச் சுருட்டு புழு மற்றும் இலை புள்ளி நோய் காணப்படும் பகுதிகளில் கார்போ சல்பான் 400 மி.லி கார்பண்டாசிம், மேங்கோசெப் ஆகியவை தலா 200 கிராம் ஏக்கருடன் ஒட்டு திரவம் 100 மி.லி. சேர்த்து தெளித்து கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். ஆய்வின்போது கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, துணை வேளாண்மை அலுவலர் ராயப்பநாதன், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், பயிர் காப்பீட்டு அலுவலர் வீராசாமி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.


Next Story