பொட்டியம் அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு


பொட்டியம் அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
x

தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து பொட்டியம் அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை அடிவாரத்தில் பொட்டியம் கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொட்டியம், மாயம்பாடி, கோட்டக்கரை, பன்னிப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை மதிய உணவு தயாரிப்பதற்கு பள்ளி அருகில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துவருமாறு சமையல் ஊழியர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். அதன்படி மாணவிகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளனர். இது குறித்த செய்தி படத்துடன் நேற்று முன்தினம் தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதையடுத்து கலெக்டர் ஷரவன்குமார் உத்தரவின் பேரில் பழங்குடியினர் நல தாசில்தார் நடராஜன், தனிதாசில்தார் இந்திரா ஆகியோர் பொட்டியம் அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு சரியான முறையில் தண்ணீர் வழங்கவில்லை என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து பள்ளிக்கு சரியான முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றனர்.


Related Tags :
Next Story