எஸ்.ஒகையூரில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு


எஸ்.ஒகையூரில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஒகையூரில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே எஸ். ஒகையூர் ஊராட்சியில் பொது நிதி மற்றும் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து கழிவுநீர் வாய்க்கால், சிமெண்டு சாலை மற்றும் பள்ளி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செந்தில் முருகன், சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது என்ஜினீயர் ஜெயபிரகாஷ், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கே.கே. அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து அசகளத்தூர், ஈயனூர் ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story