துப்புரவு தொழிலாளர்களின் பணிகளை அதிகாரிகள் ஆய்வு


துப்புரவு தொழிலாளர்களின் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

துப்புரவு தொழிலாளர்களின் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர்களின் பணிகளை தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக ஊழியர்கள், ஆணையர் (பொறுப்பு) தமயந்தி, சுகாதார ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணியாளர்களின் வருகை பதிவேடு, வாகனங்களில் தரம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் ஊழியர்களுக்கு கை உறைகள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story