125 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


125 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2023 1:30 AM IST (Updated: 29 Jun 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

125 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் 1400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சில ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இன்றியும், தரம் இன்றியும் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பார்த்திபன், மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், மசக்காளிபாளையம், சூலூர் உள்பட மொத்தம் 125 ரேஷன் கடைகளில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் பொருட்கள் இருப்பு விவரங்கள், பொருட்க ளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும், பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தனர்.

இது குறித்து வழங்கல் அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் அனுப்பப்பட்டு இருந்தால் அதற்கு பதிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து உடனடியாக மாற்றுப்பொருட்கள் வழங்கப்படும் என்றனர்.




Next Story