55 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
குமாரபாளையத்தில் 55 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குமாரபாளையம்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு ராஜேந்திரன், சுற்றுச் சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ஜான் ராஜா, செல்வராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று குமாரபாளையத்தில் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஜவுளி, மளிகை, பூக்கடை உள்ளிட்ட சுமார் 55 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் வகை (கவர்) பொருட்கள் சுமார் 40 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது. முதன்முறையாக வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கையும், ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைக்காரர்கள் மீண்டும் வைத்திருந்ததாக சுமார் ரூ.6100 வரை அபராதமும் விதிக்கப்பட்டு தொகை வசூலிக்கப்பட்டது.