பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு


பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி தாலுகாவின் தலைமை ஆஸ்பத்திரியாக தற்போது இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் பந்தலூர், மேங்கோரேஞ்ச், சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு, தாளூர் அய்யன்கொல்லி, கொலப்பள்ளி, பொன்னானி, குந்தலாடி, பாட்டவயல் பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை உள்பட தாலுக்கா பகுதிகளை சேர்ந்த பலர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் போதிய கட்டிட வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். போதிய டாக்டர்களும் இல்லை. ஆஸ்பத்திரி பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடங்டங்கள் கட்டி கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன் மற்றும் பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியை நீலகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை இணை இயக்குனர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள், கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன் ஆகியோர் கட்டிடம் கட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள அரசு மூலம் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டிங்கள் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story