குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார்


குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார்
x

குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி ஊராட்சியில் உள்ள கீழத்தெருவில் கிணற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கலங்கலாக இருப்பதாகவும், இதை குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை எனில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் பொதுமக்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிணற்றை சுத்தப்படுத்தவும், புதிதாக ஒரு கிணறு அமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

1 More update

Next Story