சூரை கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது குறித்து அதிகாரி ஆய்வு


சூரை கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது குறித்து அதிகாரி ஆய்வு
x

சூரை கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சூரை கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சூரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு (மதிய உணவு) வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் 9,10-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் அந்த மாணவர்களுக்கு சத்துணவு வழஙகப்படவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகர்களிடம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டி, பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்காததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story