தூசி பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை அதிகாரி நேரில் ஆய்வு


தூசி பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை அதிகாரி நேரில் ஆய்வு
x

தூசி பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரி பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தூசி பழைய போலீஸ் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் கட்டிடம் பாழடைந்து உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த போலீஸ் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் புதிய கட்டிடம் மாற்றப்பட்டது.

அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து செய்யாறு பொதுப்பணித்துறை அதிகாரி பன்னீர்செல்வம் நேரில் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெ்கடர் சுரேஷ் பாபு உடன் இருந்தார்.


Next Story