வால்பாறையில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை-10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


வால்பாறையில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை-10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை- 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆழியாறு, மளுக்கப்பாறை பகுதியில் உள்ள வனத்துறையின் சோதனை சாவடிகளில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின், வாகனங்கள் தனியார் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால் அதை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக பேப்பர் பைகள் வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இணைந்து பேக்கரிகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் பிளாஸ்டிக் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஓட்டல்களில் பார்சல் கட்டிக் கொடுப்பதற்கு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதும், சாப்பிடுவதற்கு பிளாஸ்டிக் இலைகளை பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story