பூச்சிக்கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


பூச்சிக்கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2023 1:15 AM IST (Updated: 5 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் விவசாயி ஒருவர் இறந்ததையடுத்து பூச்சிக்கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

தேனி

கூடலூர் 3-வது வார்டு மூனுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் 'ஸ்பிரேயர்' மூலம் பூச்சி மருந்து அடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கு மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் அறிவுறுத்தலின் படி தேனி தரக்கட்டுபாடு வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா, கம்பம் வேளாண்மை தலைமை அலுவலர் மகா விஷ்ணு ஆகியோர் கூடலூர் பகுதிகளில் உள்ள உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் உள்ள பூச்சி மருந்துகளை பார்வையிட்டனர்.


Next Story